Wednesday, December 28, 2016

பேலியோ ஆரம்பித்து சில நாட்களில் வரும் சிக்கல்களைப் பார்ப்போம்.




* தலைவலி மற்றும் லேசான காய்ச்சல் : இது உங்கள் உடம்பிலிருந்து கார்போஹைடிரேட் எனப்படும் மாவுச் சத்து விலக்கப் படுவதால் உருவாகும் தற்காலிக நிலை. பொதுவாக மூன்று நாட்களில் சரியாகும். இதற்கு கார்ப் வித் டிராயல் சிம்ப்டம் அல்லது கார்ப் ஃபுளூ என்று பெயர்.
இதற்கு தண்ணீர் அதிகம் குடிப்பது, வெதுவெதுப்பான தண்ணீரில் 5 கிராம் வரை கல்லுப்பு போட்டு குடிப்பது, கல்லுப்பு போட்டு லெமன் ஜூஸ் குடிப்பது போன்றவை உதவும்.

* அதீத சோர்வு : இதற்குக் காரணமும் கார்ப் புளூதான். மேலும் பேலியோவில் சரியான அளவில் சாப்பிடவில்லையென்றால் உடலுக்குத் தேவையாம வைட்டமின்களும் மினரல்களும் குறைபாடு ஏற்பட்டு இது வரலாம். இவர்கள் தினமும் ஒரு மல்ட்டி வைட்டமின் டேப்லட் எடுக்கலாம். அல்லது தேவையான அடிப்படை வைட்டமின்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் இதற்கு ஒரு முக்கியமான காரணம் குறைவாகச் சாப்பிடுதல். பெண்கள் குறைந்த பட்சம் 1250 கலோரிகளும், ஆண்கள் 1500 கலோரிகளும் உண்ண வேண்டும். இதற்குக் குறைந்தால் உடலின் அடிப்படை மெடபாலிசம் குறைந்து அதீத சோர்வு, கால்கள் துவண்டு போதல் போன்றவை ஏற்படலாம்.

* வயிற்றுப் போக்கு : பல காரணங்களால் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். முதல் காரணம் உணவு ஒவ்வாமை. சாப்பிட்ட உணவு ஒவ்வாமையாக இருந்தால் அந்த உணவைத் தவிர்க்க வேண்டும். பாதாம் ஊற வைப்பதில் சில நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சனங்கள் படிந்திருக்கலாம். பாதாமை ஊற வைக்கும் போது இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரை மாற்ற வேண்டும். மேலும் ஊற வைத்த பாதாமை உலர வைத்து நெய் விட்டு வறுத்து சாப்பிடுவது நல்லது.
வயிற்றில் உள்ள ஜீரனத்துக்கு உதவும் பாக்டீரியா காலனிகள் தொடர்ச்சியான கார்ப் உணவுகளால் அழிந்திருக்கலாம். அதற்கு ப்ரோபயாட்டிக் கெஃபிர் அல்லது ஊறுகாய்கள் அல்லது கிம்ச்சி போன்றவைகளை தொடர்ச்சியாக தினமும் எடுக்க வேண்டும். இந்த நிலை சரியாக நீண்ட காலமாகும்.
அல்சர் உள்ளவர்களுக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படலாம். சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. வயிற்றுப் போக்கு ஏற்படும் போடு நீர்ச்சத்து அதிகளவில் வெளியேறுவதால் நிறைய தண்னீஇர் அருந்த வேண்டும். தேவைப்பட்டால் தற்காலிகமாக இளநீர் அல்லது எலெக்டிரோலைட்டுகள் எடுக்கலாம்.

* மலச்சிக்கல் : அசைவ உணவுகள் அதிகம் எடுத்து நார்ச்சத்து எடுக்காததால் மலாசிக்கல் வருகிறது. இதற்கு இரவு உணவில் 150 கிராம் போல கீரைகள் எடுப்பது நல்லது. காலை எழுந்தவுடன் நெல்லிக்காய் ஜூஸ் உப்பு போட்டு குடிப்பதும் உதவும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. வாரம் நான்கு முறை போனாலே போதுமானது.
எந்த அறிகுறிகளும் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

சிவராம் ஜெகதீசன் 

No comments: