Thursday, November 17, 2016

மைக்ரவேவ் பயன்படுத்துவது கெடுதலானதா ?


எந்த உணவையும் எத்தனை அதிகமுறை மறுசூடு செய்கிறோமோ அந்த அளவு அதன் வைட்டமின், ஊட்டசத்துக்களில் இழப்பு ஏற்படும். சமைத்தவுடன் சூடு ஆறாமல் உண்பதே சிறந்தது. ஸ்டேக் தவிர. ஸ்டேக்கை சமைத்து ஆறவிட்டு உண்டால் தான் ஜூஸியாக இருக்கும்.
ஆக நீங்கள் மைக்ரவேவை மறுசூட்டுக்கு பயன்படுத்துகையில் வைட்டமின் இழப்பு ஏற்படும். ஆனால் அதனால் உடலுக்கு வைட்டம்ன் இழப்பு தவிர்த்த கெடுதல் இல்லை. குறிப்பாக அதனால் கான்சர் வரும் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே.
மற்றபடி மைக்ரவேவில் பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்து சூடுபண்ணுவதும் பிளாஸ்டிக் மூடி யை பயன்படுத்தி சூடு பன்ணுவதும் தவிர்க்கப்டவேண்டும், மைக்ரவேவபிள் பிளாஸ்டிக் என தனியாக இருக்கும். அதை மட்டுமே பயன்படுத்தலாம். அப்படி அல்லாத தரகுறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் பிளாஸ்டிக் உணவுடன் சேர்ந்து நம் வயிற்றுக்குள் போய்விடும்.

Neander Selvan

No comments: