Sunday, October 11, 2015

ஃபேட்டி லிவர் - Fatty Liver

 ஃபேட்டி லிவர் - Fatty Liver - By Neander Selvan.


ஃபேட்டி லிவர் வர காரணம் அதீத அளவில் லிவரில் குளுகோஸ்..குறிப்பா பழ சர்க்கரையான ப்ருக்டோஸ் சேர்வது. இதை லிவர் கொழுப்பா மாற்றியே ஆகணும். ஆனால் அதை சரியா செய்யமுடியாமல் கொழுப்பு வயிற்றில் தேங்கிவிடுகிறது.

இத்துடன் இன்ஃப்ளேமேக்சனும் சேர்ந்தால் நிலை இன்னும் மோசமாகிறது. இன்ஃப்ளமேஷன் வர காரணம் தானியங்களில் உள்ள ஒமேகா 6. பொதுவா உணவின் மூலம் எதையும் வராமல் தடுக்கலாம். வந்தபின் குணபடுத்துவது என்பது அந்த சிக்கல் நமக்கு எந்த அளவு தீவிரமா இருக்கு, உடல் எப்படி ரியாக்ட் செய்யுது என்பதை பொறுத்தது.

ஃபேட்டி லிவர் வர முக்கிய காரணம் கோலின் பற்றாகுறை. கோலின் அதிகமா கானப்படுவது நாட்டுகோழி முட்டைகளில் தான். ஒரு நாட்டுகோழி முட்டையில் 28% கோலின் இருக்கு. கோலின் நம் செல்களை சுத்தபடுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த செல்களில் தான் கொழுப்பு அடைத்து பிரச்சனை செய்யும்.
முட்டைக்கு அடுத்து அதிக அளவில் கோலின் காணப்படுவது நாட்டுகோழியில். சைவ உணவுகளில் கோலின் கிடைப்பது மிக சிரமம். ஒரு நாளுக்கு தேவையான கோலின் கிடைக்க 1 முழு காலிபிளவர் அல்லது

பிராக்களியை சாப்பிடணும். நடக்கும் விஷயமா?

ஃபேட்டி லிவர் குணமாக பின் வரும் டயட்டை பின்பற்றலாம்.

காலை உணவு: வேக வைத்த நாட்டுகோழி முட்டை 4. முழு முட்டையும் சாப்பிடணும்..மஞ்சள் கருவில் தான் கோலின் இருக்கு. மஞ்சள் கருவை தூக்கி வீசிட்விட்டு எக் ஒயிட்டை சபபிடுபவர்கள் கோலின் பற்ராகுறையை வலிந்து தேடிகொள்கிறார்கள்.

இந்த காலை உணவிலேயே ஒரு நாளுக்கு தேவையான கோலின் 100% கிடைத்துவிடும். அதனால் எக்காரணம் கொண்டும் நாட்டுகோழி முட்டை சாப்பிடாமல் இருக்கவேண்டாம்.

மதியம்: 1 கப் கொழுப்பு எடுக்காத பால்/தயிர்/பனீர்

மதியம்: க்ரில் சிக்கன்/ வறுத்த சிக்கன். வெண்ணெய் சமையல் ஆயிலா பயன்படுத்துங்க. வேறு எந்த எண்னெயும் வேண்டாம். சிக்கன் தோலுடன் சாப்பிடுங்க. சூப்பும் வைத்து குடிக்கலாம். சைடா கீரை, காய்கறி குறிப்பா காலிபிளவர், பிராக்களி சபபிடலாம். வேர் காய்கறிகள் முற்றிலும் தவிர்க்கவும்

ஸ்னாக்: சீஸ்/பால்/பனீர்/தயிர் வித் காய்கறி

டின்னர்: மீன்டும் சிக்கன் அல்லது மீன் அல்லது வெஜிட்டபிள் சூப்/ சாலட்/தேங்காய். ஏராளமா கீரை (கோலின் அதிகம் உள்ளது), காய்கறி

மீல்களை ஆல்டர்நேட் செய்துகொள்ளலாம்.

சுத்தமாக தொடக்கூடாத பொருட்கள்:

நட்ஸ்
பழங்கள்..பழங்களில் உள்ள புரொக்டோஸ் தான் லிவரில் கொழுப்பாக மாறுகிறது.
இனிப்புகள்
தானியம்
பீன்ஸ்
பருப்பு
சர்க்கரை

---

மொடாகுடியர்களுக்கு வரும் ஃபேட்டி லிவர் வியாதி குழந்தைகளுக்கும் வருவதன் காரணத்தை ஒரு ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

லிவர் முழுக்க கொழுப்பு அடைத்துகொள்ளும். நார்மலாக துருவேறிய இரும்பு நிறத்தில் இருக்கும் லிவர் முழுக்க கொலஸ்டிரால் அடைத்துகொள்வதால் அது மஞ்சள் கலரில் மாறி ஊதி, உப்பி வீங்கிவிடும். வழக்கமாக இது மொடா குடிமக்களுக்கு மட்டுமே தான் வரும். ஆனால் இப்போது இது குழந்தைகளுக்கும் வருகிறது. சுமார் 10% அமெரிக்க குழந்தைகளுக்கு இந்த வியாதி உள்ளது.
காரணம்?

சர்க்கரை. குறிப்பாக ப்ருக்டோஸ்

இது குண்டாக இருக்கும் குழந்தைகளுக்கு அதிகம் வந்தாலும் நார்மலாக இருக்கும் குழந்தைகளுக்கும் அதிக அளவில் வருகிறது. குடிக்காத குழந்தைகளுக்கு இது ஏன் வருகிறது என புரியாமல் இதற்கு "நான் ஆல்கஹாலிக் பேட்டிலிவர் வியாதி" என பெயர் வைத்து ஆராய்ந்ததில் தெரிய வந்த தகவல் என்னவெனில் கார்ன் சிரப்பிலும், ஜூஸ்களிலும், இனிப்புகளிலும் இருக்கும் ப்ருக்டோஸ் இதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது,.
 
சர்க்கரை என்பது போதை அளிக்காத சாராயத்துக்கு சமம் என்கிறார் மருத்துவர் ராபர்ட் லஸ்டிக். அதனால் மொடாகுடியர்களுக்கு வரும் வியாதி பிள்ளைகளுக்கும் வருவதுதான் சோகம்
http://www.wsj.com/articles/SB10001424127887324549004579064903051692782

No comments: